பரபரப்பு... வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.40 கோடி பறிமுதல்!
இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் இருப்பதால் பணப்பரிவர்த்தனைகள், திடீர் ஐடி ரெய்டுகள் என அதிரடி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஷூ தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் மற்றும் அவருக்கு சொந்தமான வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் ரூ.40 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேச நகரத்தில் குறைந்தபட்சம் 3 ஷூ வியாபாரிகளிடம் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளில் பெரும் தொகையான பணம் மீட்கப்பட்டது. காலணி நிறுவன உரிமையாளரின் வீட்டில் ரூ500 நோட்டுகள் அடங்கிய பல கட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நோட்டுகளை எண்ண வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
