பீகாரில் நோட்டா வாக்கு அதிகரிப்பு... தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவல்!

 
பீகார் பீகார்

பீகார் பேரவைத் தேர்தலில் நோட்டா வாக்குகள் கணிசமாக அதிகரித்து இருப்பதாக  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் 6.65 லட்சம் வாக்குகள் நோட்டாக்கு செலுத்தப்பட்டுள்ளன. இது 1.81 சதவீதமாகும். 2020-இல் 7.06 லட்சம் வாக்குகள் (1.68%) நோட்டாவுக்காக பதிவானதை ஒப்பிடும்போது இம்முறை சிறிய அளவில் குறைவு ஏற்பட்டுள்ளது. 2015-இல் 2.48% பேர் நோட்டாவை தேர்வு செய்ததை நினைவில் கொண்டால், இந்த முறை அந்த வீதமும் குறைந்ததே குறிப்பிடத்தக்கது.

பீகார்

பீகாரில் தற்போது 7.45 கோடி வாக்காளர்கள் இருப்பதிலிருந்து, 3.51 கோடி பேர் இந்த முறை வாக்களித்துள்ளனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 66.91% என்ற அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. 1951-ஆம் ஆண்டில் முதல் முறையாக பேரவைத் தேர்தல் நடைபெற்றதிலிருந்து இதுவே அதிக வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகார்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2013 முதல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் நோட்டா விருப்பம் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பு, எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் ‘49-ஓ’ படிவத்தை நிரப்பும் நடைமுறையைப் பின்பற்றியிருந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!