பீகார் முதல்வராக நிதீஷ் தொடர்வார்: சிராக் பாஸ்வான் நம்பிக்கை
பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவ் மற்றும் ராகுல் காந்தியின் ஆணவப்போக்குக்கு பீகார் மக்கள் தேர்தல் முடிவில் தக்க பதில் அளித்துள்ளனர். எதிபட்சத்தின் செயல்பாடுகளே அவர்கள் சந்தித்த தோல்விக்குத் முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது மக்களின் நம்பிக்கை மீண்டும் உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

பீகார் முதல்வராக நிதீஷ் குமார் தொடர்ந்து பதவி வகிப்பார் எனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக சிராக் பாஸ்வான் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரட்டை என்ஜின் அரசு பீகாரை வலுவான முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
