கோர விபத்து: பள்ளத்தாக்கில் உருண்ட பேருந்து... பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு!

 
ஜம்மு விபத்து ஜம்மு விபத்து

உத்தரபிரதேச மாநிலம் அக்னூர் பகுதியில் இருந்து ஜம்மு பூஞ்ச் ​​நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, தாண்டா மோர் என்ற ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர் . விபத்துக் குறித்து தகவல் அறிந்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கியதாக காவல் துறை உயரதிகாரி தெரிவித்தார். 

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் இருந்து பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அக்னூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்முவில் உள்ள தாண்டா, அக்னூர் அருகே உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது என்று ஜம்மு துணை ஆணையர் தெரிவித்தார்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தெளிவான விளக்கம் இல்லை.. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!