ரூ.25,00,000 பரிசு தொகையை படித்த கல்லூரிகளுக்கு பிரித்து கொடுத்த சந்திரயான் விஞ்ஞானி! குவியும் பாராட்டுக்கள்!

 
அடுத்த ஆண்டு சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படும் : மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனக்கு கிடைத்த ரூ.25 லட்சம்  பரிசு பணத்தை, தனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்த கல்லூரிகளுக்கு பிரித்து கொடுத்திருக்கிறார் தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேல். அவரது இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இஸ்ரோ சமீபத்தில் சாதனை படைத்தது. சந்திராயன் 3 வெற்றி பெற காரணமாக இருந்த விஞ்ஞானிகளை பிரதமர் நேரில் கண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். அவர்களை கௌரவிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன. சந்திராயன் 3ல் திட்ட இயக்குநராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த வீர முத்துவேல்.  இஸ்ரோவில் பணிபுரியும் தமிழக விஞ்ஞானிகளை  பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு இவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி ரு25லட்சம் ரொக்க பரிசை அளித்து கௌரவித்தது.

சந்திராயன்3

இந்த விழா சென்னையில் முதல்வர் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ சந்திரயான் - 3 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை பற்றிய செய்தி கொடிகட்டி பறப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.  மேலும், சந்திரயான் - 3 திட்ட இயக்குனராக தமிழகத்தை  சேர்ந்த வீரமுத்துவேல் இருந்தது பெருமையளிப்பதாகவும், இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த 9 விஞ்ஞானிகளுக்கும் தலா 25 லட்ச ரூபாய் பரிசு  வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார் .  

வீரமுத்துவேல்


இந்நிலையில் சந்திரயான் - 3 திட்ட இயக்குனரான விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், தனக்கு வழங்கப்பட்ட 25 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை தாம் படித்த 4 கல்லூரிகளுக்கு பிரித்து வழங்கியுள்ளார்.அதன்படி விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றிற்கு 25 லட்ச ரூபாயை வீரமுத்துவேல் பகிர்ந்து அளித்துள்ளார். இதையடுத்து விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web