முட்டையை எடுக்க கோழிக்கூடைக்குள் கைவிட்ட போது கடித்த நாகப்பாம்பு!

 
தேவம்மா

கர்நாடக மாநிலத்தில்  ஹரிஹர பல்லத்தட்கா கிராமத்தில் வசித்து வருபவர் 67 வயது   தேவம்மா . வீட்டிலேயே ஆடு மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இவைகளுக்கு தீவனம் வைப்பது, முட்டைகளை எடுத்து அடைகாக்க வைப்பது, குஞ்சு பொரித்ததும் அவைகளை பாதுகாத்து வளர்ப்பது, மாடுகளை பராமரிப்பது இவைகளையே  வாழ்க்கையாக்கி கொண்டிருந்தார். வழக்கம் போல்  நேற்று காலை மாட்டுத் தொழுவத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.  

ஆம்புலன்ஸ்

அந்தப் பகுதியில் அப்போது கோழி அதன் கூடைக்குள்  முட்டையிட்டுக் கொண்டிருந்தது. கோழியின் அடியில் முட்டையை எடுப்பதற்காக கையைவிட்டதும்   கோழி கூடைக்குள் கையை வைத்தபோது நாகப்பாம்பு கடித்துவிட்டது. தேவம்மா அலறி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து  உடனடியாக அவரை அருகில் உள்ள மூலிகை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு பிறகு  வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.செல்லும் வழியிலேயே தேவம்மா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web