‘டூட்டி முடிஞ்சதும் நைட்டு வீட்டுக்கு வா...’ CISF வீரரின் கன்னத்தில் அறைந்த ஹேர் ஹோஸ்டஸ்!
‘இரவு பணி நேரம் முடிஞ்சதும் என் வீட்டுக்கு வா’ என்று விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பெண் ஊழியரிடம் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரான சிஎஸெஃப் வீரர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் அவரது கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநில விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் அனுராதா ராணி என்பவர், நேற்று அதிகாலை 4 மணியளவில் மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது, ஒரு கேட் வழியாக நுழைவதற்கு உரிய அனுமதி இல்லாததால், சிஐஎஸ்எப் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத், அவரை தடுத்து நிறுத்தினார்.
A #SpiceJet employee was arrested after she slapped a male assistant sub inspector following an altercation over security screening at the #JaipurAirport. The incident was caught on a CCTV camera at the airport.
— Hate Detector 🔍 (@HateDetectors) July 12, 2024
According to #CISF officials, #AnuradhaRani was stopped by… pic.twitter.com/CmpfGKmmQk
அப்போது, அருகிலுள்ள நுழைவாயிலில் விமான ஊழியருக்கான சோதனையை மேற்கொள்ளுமாறு அனுராதா கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் பெண் சிஐஎஸ்எப் ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை. உதவி சப்-இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு சோதனையை மேற்கொள்ள, ஒரு பெண் ஊழியரை அழைத்தார்.
ஆனால் அதற்குள் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக, விமான ஊழியர் அனுராதா, உதவி சப் இன்ஸ்பெக்டரை அறைந்தார். இதுகுறித்து பெண் ஊழியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் ஊழியரிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. சிஐஎஸ்எப் பணியாளர், பணி நேரம் முடிந்ததும் தன் வீட்டிற்கு வருமாறு பெண் ஊழியரிடம் தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை கூறியுள்ளார்.
எங்களது பெண் ஊழியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான இந்த கடுமையான சம்பவத்தில், உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உள்ளூர் காவல்துறையை அணுகியுள்ளது. நாங்கள் எங்கள் பணியாளருடன் உறுதியாக நிற்கிறோம், அவருக்கு முழு ஆதரவை வழங்க உறுதிபூண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
