திணறுது டெல்லி... கடும் கட்டுப்பாடுகள்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தலைநகர் டெல்லி, கடும் மாசு காரணமாக மூச்சு முட்டிக் கொண்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால், டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் அத்தியாவசியம் இல்லாத கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் இம்மாதம் 1ம் தேதி முதல், டெல்லிக்குள் டீசல் லாரிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்று மாசு காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமாக உள்ளவர்களே சுவாசிப்பதில் பிரச்சனை உள்ள அளவிற்கு காற்றில் மாசு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடுமுறை காலங்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை க்கு இன்னும் சில நாட்களே உள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் இந்தியா முழுவதும் காற்றின் தரம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடையும், சில மாநிலங்களில் நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதால் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி 397 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு அக்டோபர் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை நேற்று 325 ஆக இருந்தது. இது காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது. வாகன ஓட்டிகள் சிவப்பு சிக்னலின் போது வாகனத்தின் இன்ஜினை அணைக்க வேண்டும் என பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காற்றின் தரக் குறியீடு 400ஆக மேலும் உயர்ந்து அதிர்ச்சியளிக்கிறது.
இதனால் ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் என்சிஆர் பகுதிகளில் இயக்கப்படும் டீசல் பேருந்துகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. டீசலில் இயங்கும் பேருந்துகளால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!