குரூப் - பி மற்றும் குரூப் - சி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! முதல்வர் அறிவிப்பு!

 
தீபாவளி

நாடு முழுவதும் கோலாகலமாக தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. மத்திய, மாநில அரசுகள் வரும் தேர்தலை மனதில் கொண்டு, இந்த வருட தீபாவளிக்கு பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ அறிவிப்பு டெல்லி மாநில அரசு ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது. டெல்லி அரசு ஊழியர்களில் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கு தலா ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தீபாவளி

இந்த விகிதங்களில் சுமார்  80,000 ஊழியர்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்குவதற்கு டெல்லி அரசு ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி தலைநகர் டெல்லி மாநில அரசில் பணிபுரியும்  ஊழியர்கள் அனைவரும் எங்களது குடும்ப உறுப்பினர்கள் என்று தெரிவித்துள்ளார்.  

18 வயசுக்கு மேல் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி!

பாரம்பரிய பண்டிகையான தீபாவளி தினத்தில் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவற்காக இந்த போனஸ் வழங்கப்படுகிறது. டெல்லி மக்களுக்கும், டெல்லியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web