பெங்களூருவில் ரூட் மாறிய வண்டி... ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பித்த இளம்பெண்!

 
ஆட்டோ

பெங்களூரில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் வழிமாறிச் சென்றதால், பெண் பயணி ஒருவர் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆட்டோ டிரைவர் மீது பெங்களூரு போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

'நம்ம யாத்ரி' செயலி மூலமாக நேற்றிரவு ஹோராமாவில் இருந்து தனிச்சந்திராவுக்கு இளம்பெண் ஒருவர் ஆட்டோ ரிக்க்ஷாவை முன்பதிவு செய்துள்ளார். 


பெங்களூருவில் ஹெப்பால் அருகே ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் தவறான பாதையில் சென்றார். பெண் பயணி தொடர்ந்து கூச்சலிட்டும் ஓட்டுநர், இளம்பெண்ணின் கதறலைக் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து ஆட்டோவை தவறான பாதையில் ஓட்டிச் சென்றதால், தப்பிக்கும் முயற்சியில் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில், “அவசர தேவைகளுக்கு நம்ம யாத்ரி செயலியில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வசதி இல்லை. 24 மணி நேரம் காத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, அவசர காலத்தில் பெண்கள் எப்படி காத்திருப்பார்கள். பெண்களுக்கு என்ன பாதுகாப்பு? இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவரின் புகாருக்கு பதிலளித்த நம்ம யாத்ரி செயலியின் நிர்வாகத்தினர், "உங்கள் மனைவிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அவர் நலமுடன் இருப்பதாக நம்புகிறோம். பயணம் குறித்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றனர். இந்த சம்பவம் கர்நாடக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web