பகீர்... இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. அரை நிர்வாணமாக தெருவில் ஓடிய அவலம்!

 
பாலியல் துன்புறுத்தல் பாலியல் துன்புறுத்தல்

வேலைத் தேடி வந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரை நிர்வாண நிலையில், இளம்பெண் தெருவில் தப்பித்து ஓடியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசிக்கும்  பட்டியலின சாதிப் பெண் தனது கணவருடன் வேலை தேடி உஜ்ஜைனிக்கு வந்துள்ளார். பின்னர் வேலை கேட்டு இந்திரா நகர் பகுதியில் சுற்றித்திரிந்தனர். அப்போது அவருக்கு அப்பகுதியை சேர்ந்த ரவி உதவி செய்ய முன் வந்துள்ளார். பெண் மீது அவருக்கு ஏற்பட்ட தவறான அபிப்ராயத்தால் வேலை வாங்கித் தருவதாக கூறி இருவரையும் மோட்டார் சைக்கிளில் தாஜ்பூருக்கு அழைத்துச் சென்றார். இந்த விஷயம் தெரிந்துதான் இம்ரான் என்பவர் அங்கு வந்தார்.

சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்

அப்போது, ​​அந்த பெண்ணின் கணவரை, ரவி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இம்ரான் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில், கடைக்கு சென்ற ரவி, அந்த பெண்ணின் கணவரிடம் ஏதோ சொல்லி, அவரை அங்கேயே உட்கார வைத்துவிட்டு, தாஜ்பூருக்கும் வந்தார். பின்னர் அந்த பெண்ணை ரவியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் இருந்து தப்பிக்க சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அரை நிர்வாணமாக ஓடினார்.

பின்னர், சிறிது தூரத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், பெண்ணுக்கு ஆடைகளை கொடுத்து உதவியுள்ளனர். பின்னர் இதுகுறித்து பன்வாசா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவீந்திர கட்டாரே தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரவி, இம்ரான் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடி கீழே விழுந்ததில் கால் முறிந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, அந்தப் பெண் பேசிய மொழி புரியாததால் போலீஸாரால் உடனடியாக விசாரணையைத் தொடங்க முடியவில்லை. வேறு இடத்தில் இருந்து மொழி தெரிந்த போலீசார் மூலம் விஷயம் தெரிய வந்ததையடுத்து, சிசிடிவி மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!