’மாயமான பேரன்’.. நீதிமன்றத்தை அணுகிய அதுல் சுபாஷின் தாய்!

 
அதுல் சுபாஷ் அதுல் சுபாஷ்

அதுல் சுபாஷ் மோடி பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வந்தார். 2019 ஆம் ஆண்டு, சுபாஷ் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு பிப்ரவரி 2020 இல் ஆண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள குடும்ப நல கோர்ட்டிலும் நிகிதா வழக்கு தொடர்ந்தார்.

அதுல் சுபாஷ்

குழந்தையின் பராமரிப்புக்காக சுபாஷ் ஒவ்வொரு மாதமும் 40,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 9ம் தேதி பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் சுபாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அரியானாவில் பதுங்கியிருந்த நிகிதாவை கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனர். நிகிதாவின் தாய் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

அதுல் சுபாஷ்

இந்நிலையில் அதுல் சுபாஷின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மகன் இறந்ததை அடுத்து அவரது 4 வயது பேரனை காணவில்லை. எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. எனவே, தனது பேரனின் பாதுகாப்பை உறுதி செய்து, அவரை மீட்டுத் தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க உத்தரபிரதேசம், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் வழக்கின் விசாரணை ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!