பெரும் சோகம்.. தண்ணீர் குடிக்க கிணற்றில் குதித்த 32 குரங்குகள் பரிதாப பலி!

 
குரங்குகள்

ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள பாங்கி தாலுகாவில் உள்ள சோரத் கிராமத்தில் மிகப் பெரிய விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் குரங்குகள் குதித்து தண்ணீரை குடித்துள்ளன. இதில் 32 குரங்குகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோட்ட வன அலுவலர் குமார் ஆஷிஷ் கூறுகையில், ''வனப்பகுதியில் இருந்து குரங்குகள் தண்ணீர் குடிக்க கிணற்றில் குதித்துள்ளன.

இதில், குரங்குகள் நீரில் மூழ்கி இறந்துள்ளன. 32 குரங்குகள் இறந்து கிடந்தன. அந்த கிணற்றில் போதுமான தண்ணீர் உள்ளது. இறந்ததற்கான காரணத்தை அறிய குரங்குகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  குரங்குகள் இறந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும். ஜார்க்கண்டின் பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதனால் நீர்நிலைகள் நீர் வற்றி காய்ந்து வருகின்றன. இதனால் வன விலங்குகள் கிராமங்களுக்குள் படையெடுக்கின்றன,'' என்றார். கடந்த வாரம் செயின்பூர் வனப்பகுதியில் தண்ணீர் தேடி சென்ற 3 நரிகள் கிணற்றில் மூழ்கி இறந்தன. இதேபோல், ஹசாரிபாக் மற்றும் கிரிதி மாவட்டங்களில் ஏராளமான வௌவால்கள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web