கனமழை; பெருவெள்ளம்... அசாமில் பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு!

 
அசாம் வெள்ளம் அசாம் வெள்ளம்
கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இது தவிர, திகான், ஜியா-பராலி, பாகி, ஷியாரா போன்ற ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. அஸ்ஸாமில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சிக்கிம் வெள்ளம்

இந்நிலையில், அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் 10 காண்டாமிருகங்கள் உட்பட 180 வன விலங்குகள் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக 75 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 2,406 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள 316 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களில் சுமார் 2.95 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!