இறந்த மகனின் விந்தணுவை கொடுக்க மறுத்த மருத்துவமனை.. அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!
டெல்லியை சேர்ந்தவர் ப்ரீத் இந்தர் சிங். 30 வயதான அவருக்கு ஜூன் 2020 இல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் புற்றுநோய்க்கான கீமோதெரபியை மேற்கொள்வதற்கு முன்பு அவரது விந்தணு மாதிரியை எடுத்து கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகு, இந்தர் சிங் ஜூன் 27, 2020 அன்று தனது விந்தணு மாதிரியை மையத்தில் சேமித்து வைத்தார். பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், ப்ரீத் இந்தர் சிங்கின் பெற்றோர் மருத்துவ மனையை அணுகி, தங்கள் மகனின் சேமித்து வைக்கப்பட்டுள்ள விந்தணுவை தானமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் மையமும் கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு, அவர்கள் தங்கள் மகனின் உறைந்த விந்தணு மாதிரியை ஒப்படைக்க வேண்டும். அதன் மூலம் வாடகைத் தாய் மூலம் பேரக்குழந்தையை வளர்க்க விரும்புகிறோம். மேலும், எங்கள் தலைமுறையை பாதுகாக்க வேண்டும்' என, அவரது பெற்றோர், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், “மனைவி அல்லது குழந்தைகள் இல்லாத நிலையில், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ வாரிசுகளாகிவிட்டதால், பெற்றோர்கள் விந்தணுவுக்கு உரிமை உண்டு. இறந்த மகனின் விந்தணுவை சொத்தாக கருதலாம் என்றும், இந்து சொத்து சட்டப்படி மகனின் சொத்தில் பெற்றோருக்கு முதல் உரிமை உண்டு என்பதால், இறந்த மகனின் விந்தணுவை பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.

மகனின் விந்தணுவைப் பயன்படுத்தி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக, 2002ல் காசாவில் கொல்லப்பட்ட 19 வயது ராணுவ வீரரின் பெற்றோருக்கு விந்தணு தானம் செய்ய இஸ்ரேல் அரசு சட்டப்படி அனுமதி வழங்கியது தொடர்பான பல வழக்குகளை நீதிபதி கையாண்டார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
