“வேற வழி தெரியலை” வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தேர்தல் பணியில் இருந்த காவலர் தற்கொலை!

 
தயாப் கான்

’எனக்கு வேற வழி தெரியலை’ என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் மரணம் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருபவர் தயாப் கான். தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் அம்ரோஹா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தயாப் கான் தற்கொலைக்கு முன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தது தெரியவந்தது.

அதில், "நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை. என்னை மன்னியுங்கள். இதை கோழைத்தனமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எனக்கு வேறு வழி தெரியல" என்று பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web