சோதனையில் சிக்கிய ரூ.24 கோடி மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள்.. கணவன் - மனைவி அதிரடியாக கைது!
சமீபகாலமாக தூத்துக்குடி கடல் வழியாக கஞ்சா, கடல் அட்டை, ஐஸ் போதைப்பொருள், ஹெராயின், பீடி இலை மூட்டைகள், வெள்ளி கொலுசுகள், உரம், மஞ்சள் போன்ற பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. கடல் வழி கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில உளவுத்துறை, இந்திய கடலோர காவல்படை, மரைன் போலீசார், தூத்துக்குடி மாவட்ட போலீசார் தொடர்ந்து கடல் பகுதி மற்றும் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட சிறப்பு ஆய்வாளர் ரவிக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூத்துக்குடி இனிகோ நகரில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டுக்குள் 8 கிலோ மெத் பீட்டமைன் கிரிஸ்டல் (ஐஸ் போதைப்பொருள்) இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஐஸ் போதைப்பொருளை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், வீட்டில் இருந்த நிர்மல்ராஜ், அவரது மனைவி ஷிவானி ஆகிய இருவரையும் கைது செய்து, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் ஐஸ் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் ஐஸ் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.கைப்பற்றப்பட்ட 8 கிலோ ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.8 கோடி என்றும் அதன் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
