அதிர்ச்சி... பேரக் குழந்தையை மாடியிலிருந்து வீசி எறிந்த பாட்டி... விசாரணையில் பகீர்!

 
கேரள குழந்தை

தன்னுடைய பேரக் குழந்தையை 5வது மாடியில் இருந்து வீசி எறிந்து கொன்றிருக்கிறார் குழந்தையின் பாட்டி. அது மகளின் முறைதவறிய உறவில் பிறந்த குழந்தை என்பதால், மகள் கர்ப்பமானதையே மறைத்து வீட்டிலேயே பிரசவம் பார்த்து, பிறந்த அழகான ஆண் குழந்தையை மாடியில் இருந்து வீசி எறிந்து கொன்றிருக்கிறார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 23 வயது இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண் தனது சமூக வலைதள காதலனுடன் திருச்சூரில் பழகி வந்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த நெருக்கம் காரணமாக இந்த பெண் கர்ப்பமானார். இதனால் அந்த பெண் தனது கர்ப்பத்தை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு தனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குளியலறையில் ஆண் குழந்தை பிறந்தது.

திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால், அந்த பெண் தனது குடும்பத்தினருக்கு பயந்து, குழந்தையை பெற்றோரிடம் இருந்து மறைக்க முயன்றார். இதனையடுத்து குழந்தையை ரகசியமாக கொல்ல முயன்ற நபர் பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி, தனது வீட்டின் ஐந்தாவது மாடி ஜன்னல் வழியாக சாலையில் வீசியுள்ளார்.

அதன்பின் அந்த வழியாக சென்ற நகர துப்புரவு பணியாளர்கள் சாலையில் கிடந்த பிளாஸ்டிக் பையை குப்பை என நினைத்து அப்புறப்படுத்த முயன்றனர். பிளாஸ்டிக் பைக்குள் பிறந்த ஆண் குழந்தை பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த துப்புரவு பணியாளர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி குடியிருப்பு பகுதிகளில் விசாரணை நடத்தினர். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ரத்தக் கறைகள் இருந்ததைக் கண்ட போலீசார், வீட்டில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், தான் செய்த குற்றத்தை அந்த இளம் பெண்ஒப்புக்கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது ஐபிசி பிரிவு 302 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் சிகிச்சைக்காக எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவரையும் அவரது ஆண் நண்பரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குழந்தையின்  பிரேத பரிசோதனை முடிவுகள், வெளியானது.

குழந்தை

அதில், மண்டை ஓட்டில் ஏற்பட்ட  படுகாயம், கீழ் தாடையில் கூடுதல் காயங்கள் ஆகியவற்றால் மரணத்திற்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ``குழந்தைகளை பாதுகாக்க முடியாவிட்டால், குழந்தைகளை கொல்வது போன்ற கொடூர செயல்களை யாரும் செய்யக்கூடாது, குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகள் இல்லம் உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் உள்ளன. அங்கு பாதுகாப்பாக வளர்வார்கள்' என, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web