இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு, கனமழையால் ரூ.1,753.63 கோடி இழப்பு... பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு!

 
இமாச்சல பிரதேசம் வெள்ளம் இமாச்சல பிரதேசம் வெள்ளம்

இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ள நிலையில் கனமழையால் ரூ.1753.63 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இமாச்சலப் பிரதேசம்

பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 192 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் மழை தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 106 ஆகும். சாலை விபத்துகளில் சிக்கி 86 பேர் உயிரிழந்ததும் இதில் அடங்கும். இதனால், இயற்கை பேரிடர்கள் மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்பு ஆகிய இரு வகை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளன என அந்த அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.

இமாச்சல பிரதேசம்

இவற்றில் மண்டி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 318 சாலைகள் முடங்கியுள்ளன. 3 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, குல்லு (67 சாலைகள்), காங்ரா (23 சாலைகள்) மற்றும் சிர்மவுர் (22 சாலைகள்) ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகள் நடந்து வரும் சூழலிலும், பல பகுதிகளை சென்றடைவது இயலாத ஒன்றாக உள்ளது. எனினும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும் மாநில பேரிடர் மேலாண் கழகம் அறிவுறுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?