சத்தீஸ்கரில் மாவேயிஸ்டுகள் குண்டுவெடிப்பு... பாதுகாப்பு படை வீரர் காயம்!

இன்று மிசோராம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சத்தீஸ்கரில், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நடைபெறும் இடம் மாவோயிஸ்ட் நிறைந்த இடமாகும். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மீதமுள்ள 10 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
Chhattisgarh Assembly polls: CRPF Jawan injured in IED blast in Naxal-hit Sukma
— ANI Digital (@ani_digital) November 7, 2023
Read @ANI Story | https://t.co/AOpK4h68Fx#CRPF #ChhattisgarhAssemblypolls #Sukma #Chhattisgarh #ChhattisgarhElections2023 pic.twitter.com/e2wv6GfTE4
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாஜகவும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் மும்முரமாக போராடி வருகின்றன.
இந்தநிலையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். குண்டுவெடிப்பால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்புடன் காணப்படுகிறது. இதையடுத்து, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!