ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து... உடல் கருகி 7 பேர் பலியான சோகம்!

தராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிபின் தரைதளத்தில் இயங்கி வந்த ரசாயன கடையில் திடீரென ஏற்பட்ட தீ, அருகிலிருந்த குடியிருப்பு பகுதிகளிலும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை அடுத்த நம்பப்பள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் இயங்கி வந்த ரசாயன கடையில் ஏற்பட்ட தீ மளமளவென குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அபாய குரல் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளை தொடங்கினர்.
தீயணைப்பு வாகனம் வருவதற்குள் மளமளவென பரவி தீயில் கருகி 7 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ரசாயன கடை என்பதால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!