பயங்கர நிலச்சரிவு; வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்; 63 பேர் மாயம்.. தேடும் பணி தீவிரம்!
மத்திய நேபாளத்தில் உள்ள மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று காலை 63 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் திரிசூலி ஆற்றில் பெரும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.
Rescuers from Armed police force, Nepal’s getting ready for search and rescue operations at Narayeni river . pic.twitter.com/QLam8nHSXI
— Roshan Khadka (@roshankhadka3) July 12, 2024
இந்த சம்பவம் இன்று ஜூலை 12ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட தகவலின்படி, இரண்டு பேருந்துகளிலும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்துள்ளனர். இன்று அதிகாலை 3:30 மணியளவில் நிலச்சரிவு பேருந்துகளை இழுத்துச் சென்றது. நாங்கள் சம்பவ இடத்தில் இருக்கிறோம். இந்த இடத்தில் இடைவிடாது மழை பெய்து வருவதால், காணாமல் போன பேருந்துகளைத் தேடும் முயற்சியில் இடையூறு ஏற்படுகிறது" என்று சித்வானின் தலைமை மாவட்ட அதிகாரி இந்திரதேவ் யாதவ் உறுதிப்படுத்தினார்.

நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் கூறுகையில், "நாராயணாட்-முகலின் சாலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளைக் காணவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், பயணிகளைத் தேடித் திறம்பட மீட்க, உள்துறை நிர்வாகம் உட்பட, அரசின் அனைத்து நிறுவனங்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன் என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
