ரோலக்ஸை விஞ்சிய ‘மியாவ் மியாவ்’... ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

 
போதைப்பொருள்

குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஆய்வகங்களில் சட்டவிரோதமாக ``மியாவ் மியாவ்'' என்ற போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இதுகுறித்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, பயங்கரவாத தடுப்பு படையினரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் இணைந்து சிறப்புப் படையை உருவாக்கி, மூன்று மாதங்களாக மருந்து தயாரிப்பு ஆய்வகங்கள் உள்ள இடங்களை கண்காணிக்கத் தொடங்கினர்.

இதில், மருந்துகள் தயாரிக்கப்படும் ஆய்வகங்கள் குறித்து தெரியவந்தது. உடனடியாக குஜராத் மற்றும் ராஜஸ்தானில் நடத்தப்பட்ட சோதனையில் 149 கிலோ போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.300 கோடி. ராஜஸ்தானில் உள்ள இரண்டு ஆய்வகங்களிலும், குஜராத்தில் உள்ள அம்ரேலியில் ஒரு ஆய்வகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் போதைப்பொருள் தயாரிக்க தேவையான பொருட்கள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போதைப்பொருள் உற்பத்திக்கு காரணமான முக்கிய குற்றவாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ₹4,000 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மகாராஷ்டிராவில்தான் இதுபோன்ற மருந்துகள் ஆய்வகங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் விரிவடைந்து வருகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web