மகளை கொலை செய்ய ப்ளான் போட்ட தாய்.. அடுத்த நடந்த ட்விஸ்ட்.. விசாரணையில் பகீர்!
உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ரமாகாந்த். இவரது மனைவி அல்கா தேவி. இவர்களது மகள் அப்பகுதியைச் சேர்ந்த அகிலேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மைனர் பெண்ணை அகிலேஷ் கடத்தி சென்றுள்ளார். மகள் காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி அகிலேஷை கைது செய்தனர். பெண்ணும் பத்திரமாக மீட்கப்பட்டார். மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் அகிலேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

விஷயம் அறிந்த அல்காதேவி, தனது மகளை ஃபரூகாபாத் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர்பூர் காஸ் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதே சமயம் மகளின் காதல் விவகாரம் தெரிந்ததும் அவமானம் அடைந்த அல்காதேவி, தன் மகளையே கொல்ல திட்டமிட்டார். இதற்காக, 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து வெளிவந்த சுபாஷ் சிங் (38) என்பவரை அணுகி, ரூ.50 ஆயிரம் கொடுத்து தனது மகளை தீர்த்து கட்டும்படி கூறினார். இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு சென்ற மகள் இந்த சுபாஷை காதலித்து வந்துள்ளார். மேலும் அவருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் மகளின் தாய் அல்காதேவிக்கு இந்த விஷயம் தெரியாமல் பணம் கொடுத்து கொலை செய்யும்படி கூறியுள்ளார்.

ஆனால் சுபாஷ் சிங்கோ தனது காதலியைக் கொல்வதற்குப் பதிலாக அவளுடைய தாயைக் கொன்றான். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அவளை கொன்றதாக சுபாஷ் சிங் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்னதாக, கடந்த அக்டோபர் 5ம் தேதி சுபாஷை அல்கா தேவி சந்தித்துப் பேசினார். அப்போதுதான் சுபாஷ் அவரை கொன்றார். வீட்டை விட்டு வெளியே சென்ற அல்காதேவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கணவர் அவரது செல்போனில் தொடர்பு கொண்டார். அதை எடுக்காததால், போலீசில் புகார் செய்தார். அதன் பிறகு போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த பெரிய உண்மை வெளிவந்தது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
