நவராத்திரி திருவிழா.. எப்படி கொண்டாடுவது? தாத்பர்யம் என்ன? எப்போது துவங்குகிறது?!
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் பலவகையான பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவே கொண்டாட கூடிய, மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் நவராத்திரி. இந்தியாவில் பெண் தெய்வ வழிபாடு, பராசக்தியாக, துர்கா தேவி வழிபாடு என ஆதிபராசக்தி, அம்பிகையை வெவ்வேறு வடிவில் வழிபடும் உற்சவம் தான் நவராத்திரி. அந்த வகையில் 2024 நவராத்திரி எப்போது தொடங்குகிறது, நவராத்திரியின் சிறப்புகள் குறித்த பதிவு தான் இது.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான பண்டிகை தான் நவராத்திரி. புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து பிரதமை திதியில் நவராத்திரி தொடங்கி 10வது நாள் விஜயதசமியாக 10 நாள் உற்சவம் நிறைவேறும்.
ஆண்டுக்கு 4 முறை நவராத்திரி கொண்டாடப்பட வேண்டும், அதாவது 3 மாதங்களுக்கு ஒரு முறை அம்பிகையை வழிபட வேண்டும் என புராணங்களில் நூல்களில் கூறப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியில் தான் அசுரனை வதம் செய்து, பூமியை பராசக்தி காப்பாற்றினார் என்பதன் அடிப்படையில், இந்தியா முழுவதுமே புரட்டாசி மாதம் நவராத்திரி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி கொண்டாடப்படுவதற்கான முக்கியமான காரணம் அம்பிகை ஒன்பது நாட்கள் அசுரனுடன் போர் புரிந்து, பத்தாவது நாள் மகிஷாசுரனை வதம் செய்து மகிஷாசுரமர்த்தினியாக வழிபாடு செய்யப்படுகிறாள். கடுமையான போரில் ஈடுபட்ட இந்த 9 நாட்களை, நவராத்திரியாக, அம்பிகைக்கு பூஜை செய்து விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நவராத்திரி கொண்டாட்டம் என்பது கொலுவைத்து கொண்டாடுபவர்களும் உண்டு. அதேபோல கொலு வைக்காதவர்கள், கொலு இல்லாமலே, கலசம் வைத்து தினமும் பூஜை செய்து 9 நாட்களும் நவராத்திரி கொண்டாடி வருகிறார்கள்.
நடப்பாண்டில் 2024 புரட்டாசி அமாவாசை அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. இதற்கு அடுத்த நாள் அக்டோபர் 3ம் தேதி வியாழக்கிழமை பிரதமை திதியில் நவராத்திரி தொடங்கி அக்டோபர் 11ம் தேதி தசமி திதியில் முடிகிறது. பத்தாவது நாள் தசமி திதி விஜயதசமியாக ஆயுத பூஜையாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!