பகீர்... செங்கோட்டை குண்டுவெடிப்பு ... தீபாவளி, குடியரசு தினத்திலேயே தாக்குதல் திட்டம்!
செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே 12 பேர் உயிரிழந்த குண்டுவெடிப்பு வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரித்ததில், தாக்குதல் மிகுந்த திட்டமிட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.
விசாரணையில், ஃபரிதாபாத்தில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய டாக்டர் முஸம்மில் கனாய் மற்றும் டாக்டர் உமர் நபி ஆகியோர், ஜனவரி மாதம் செங்கோட்டையில் முன்னோட்ட சோதனை நடத்தியதாக வெளிச்சத்துக்குவந்துள்ளது. ஆரம்ப திட்டம் ஜனவரி 26 குடியரசு தினத்திலும், பின்னர் தீபாவளி கூட்ட நெரிசலிலும் தாக்குதல் நடத்துவதாக இருந்தது என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு–காஷ்மீர், ஹரியானா, உத்தரபிரதேசம் முழுவதும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்புகளுடன் தொடர்புடைய “வெள்ளை காலர்” பயங்கரவாதிகள் குழு கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர் உமர் நபி, இந்த அமைப்பில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.

விசாரணையில், வெடிபொருள் அவசரமாக பொருத்தப்பட்டபோது தற்செயலாக வெடித்திருக்கலாம் என்றும், அதனால் தாக்கம் குறைந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட மாதிரிகளில், அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிமருந்து தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஃபரிதாபாத்தில் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டதுடன், டாக்டர் முசம்மில் கனாய் மற்றும் டாக்டர் ஷாஹீன் சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வெடிபொருளின் தன்மை, கலவை, மற்றும் அதன் பயன்பாடு குறித்து தடயவியல் ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
