சோகம்... கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் பரிதாப மரணம்!

 
கள்ளச்சாராயம்

நாடு முழுவதுமே அடுத்து வரும் ஒரு தலைமுறை மறைமுகமாக போதைக்கு அடிமையாகி வருகிறது. பல இடங்களில் போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றுகின்றனர். தமிழகத்தில் டாஸ்மாக் உபயத்தில் தமிழக இளைஞர்கள் தள்ளாடுவதைப் போலவே பல மாநிலங்களிலும் மது போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில், ஹரியானாவின் யமுனா நகரில் கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர் பகுதியில் மது அருந்திய இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை அன்று உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக போலீஸார் அங்கு சென்றபோது, அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 6 பேரும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தது தெரியவந்தது.

அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்ததால் மக்கள் அதிர்ச்சி

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசி உள்ள யமுனா நகர் காவல்துறை கண்காணிப்பாளர் கங்கா ராம் புனியா, கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

7 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் அறிவிப்பு

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பழைய தொழிற்சாலை ஒன்றை கண்டறிந்துள்ள போலீஸார், அங்கு சாராயம் காய்ச்சி விற்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web