மும்பையில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 50 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 
வெடிகுண்டு வெடிகுண்டு

மும்பையில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையின் ஜஸ்லோக், ரஹேஜா, செவன் ஹில் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் கடிதம் வந்ததாக கூறப்பட்டது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது குறித்து காவல் துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


காவல் துறையினரின் முதற்கட்ட தகவலின்படி மருத்துவமனையின் படுக்கைகள், பாத்ரூப் பகுதிகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு உள்ளதாக சைப்ரஸ் நாட்டிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகவும், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரித்து வருவதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். 

வெடிகுண்டு

உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். மின்னஞ்சல் குறித்தும் விசாரணையில் போலீசார் தீவிரமாக இயங்கினார்களோ. மின்னஞ்சல்கள் விபிஎன் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்தது. தீவிர சோதனையில் இது புரளி என்றும் கேஎன்ஆர் என்ற ஆன்லைன் குழு இந்த புரளி மின்னஞ்சல்களுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!