அதிர்ச்சி... சக மாணவியிடம் பேசியதற்காக 12ம் வகுப்பு மாணவனின் கை விரல் துண்டிப்பு!

 
மாணவர்கள் வகுப்பறை தேர்வு நட்பு தோழமை ப்ரெண்ட்ஷிப்

அடுத்த தலைமுறை எதை நோக்கி பயணமாகி கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதுமே பெரும் பதைபதைப்பு உருவாகி வருகிறது. ஒரு பக்கம், சாதனைகளின் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது திறமையால் வியக்க வைக்கிறார்கள். இன்னொருபுறம் பலரும் தங்களது செய்கையினால் கீழ் நோக்கி செல்கிறார்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், தன்னுடன் வகுப்பில் கூடப் படிக்கும் சக மாணவியிடம் பேசியதற்காக 12ம் வகுப்பு மாணவனின் விரலை, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியே துண்டித்திருக்கிறார்கள். டெல்லியில் தனியார் பள்ளியொன்றில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் டெல்லியில், இருபாலர் பள்ளி ஒன்றில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர், அண்மையில் கையில் ரத்தம் சொட்ட வீடு திரும்பியிருக்கிறார். பழுதான பைக் செயினை சரி செய்யும்போது விரல் சிக்கி துண்டானதாக பெற்றோரிடம் அவர் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், மகனுக்கு சிகிச்சை அளித்தனர்.

டெல்லி போலீஸ்

விரல் துண்டிக்கப்பட்டது தொடர்பாக 12ம் வகுப்பு மாணவன் அளித்த விளக்கத்தில், அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் திருப்தியடையவில்லை. இதனையடுத்து மருத்துவரிடம் மட்டும் விரல் துண்டிக்கப்பட்டதன் மர்மத்தை மாணவன் தெரிவித்துள்ளான். சிறுவன் சிக்கலில் இருப்பதை அறிந்த மருத்துவர், மாணவனின் தந்தையை அழைத்து எச்சரித்திருக்கிறார்.

மகனைத் தாக்கி அவனது விரலை எவரோ துண்டித்துள்ளனர் என்பதை அறிய நேர்ந்ததும், அவனது தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில் 12ம் வகுப்பு மாணவன், தான் ஆபத்தில் இருப்பதாக விளக்கினான். உடன் படிக்கும் மாணவி ஒருவரிடம் 12ம் வகுப்பு மாணவன் பேசியது தொடர்பாக, அதே பள்ளியில் படித்து தற்போது கல்லூரியில் சேர்ந்திருக்கும் முன்னாள் மாணவர்கள் பிரச்சினை செய்தார்களாம்.

கை விரல் கை நசுங்குதல் வீக்கம்

சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் பூங்கா ஒன்றுக்கு அழைத்துச்சென்ற அந்த முன்னாள் மாணவர்கள், 12ம் வகுப்பு மாணவனை தாக்கி ‘இனிமேல் வகுப்புத் தோழியிடம் பேசக்கூடாது’ என்று எச்சரித்ததோடு, முன்னர் பேசியதற்கு தண்டனை என்ற பெயரில் மாணவரின் விரலை கல்லால் நசுக்கி துண்டித்திருக்கிறார்கள். இதனை வெளியே சொன்னால் குடும்பத்தினரையும் தாக்குவோம் என அந்த முன்னாள் மாணவர்கள் எச்சரித்தார்களாம். வழக்கு பதிவு செய்த போலீஸார், 12ம் வகுப்பு மாணவரைத் தாக்கி விரலை துண்டித்த முன்னாள் மாணவர்களை தேடி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web