அதிர்ச்சி... செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் மரணம்.. 1 சிறுமி கவலைக்கிடம்!

 
அரியானா செங்கல் சூளை அரியானா செங்கல் சூளை

செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு சிறுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் புடானா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூளையில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் செங்கல் சூளை சுவர் அருகே இரவு நேரத்தில் வேலை முடிந்த நிலையில் குழந்தைகளுடன் தொழிலாளர்கள் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சூளையின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சூரஜ் (9), நந்தினி (5), விவேக் (9), 3 மாத குழந்தை நிஷா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த 5 வயது சிறுமி கவுரி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து குழந்தைகளும் உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள பதாவ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி மீனா தெரிவித்தார். 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!