அதிர்ச்சி... ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி... 15 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்பு!
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் சுர்கப்பாரா கிராமத்தில் விவசாயத்திற்காக போர்வெல் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. போர்வெல் பணிக்காக தோண்டிய குழியை முழுமையாக மூடாமல் சென்று விட்ட நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் ஒன்றரை வயது மகள், எதிர்பாராத விதமாக போர்வெல் குழாய்க்குள் தவறி விழுந்தார்.
#WATCH | Gujarat: A girl fell into a 45-50 feet deep borewell in Surgapara village, Amreli, NDRF team is at the spot and rescue operation is underway. https://t.co/XZEGg7RSTZ pic.twitter.com/qwBQCBUceZ
— ANI (@ANI) June 14, 2024
அந்த வழியாக சென்றவர்கள் குழந்தையின் கூக்குரல் கேட்பதை அறிந்து உள்ளே பார்க்கும்போது, குழந்தை ஆழ்துளை கிணற்றின் குழாய்க்குள் விழுந்தது தெரியவந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்திற்கு விரைந்து வந்த அவர்கள், கேமரா ஒன்றை ஆழ்துளை குழாய்க்குள் செலுத்தி குழந்தை இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து குழந்தைக்கு ட்யூபுகள் வழியாக ஆக்ஸிஜன் மற்றும் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள், ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியின் அருகிலேயே மற்றொரு பள்ளத்தை தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளை கிணற்றில், 45 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருப்பது தெரியவந்தது. சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக விடிய விடிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அதிகாரிகள் குழந்தையை மிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் இன்று அதிகாலை 5 மணி அளவில் அந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
