அதிர்ச்சி...அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி.. 3 பேர் படுகாயம்!
இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் அரசு பேருந்து ஒன்று 7 பயணிகளுடன் ஜுப்பால் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பேருந்து மலைப்பகுதியில் கவிழ்ந்து விழுந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

இந்த கோர விபத்தில் பேருந்தினடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் 2 பேர்உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!
