அதிர்ச்சி.. காற்றில் கசிந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம்.. சுவாசித்த கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்!

 
ஹைட்ரோகுளோரிக் அமிலம்

டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஹைட்ரோகுளோரிக் அமிலம் கசிந்ததால், அதை சுவாசித்த மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. கர்நாடகாவில் இருந்து எர்ணாகுளத்துக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெள்ளிக்கிழமை (ஜூன் 28) மாலை கேரளாவின் கண்ணூர் மாவட்டம் ராமாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்புறத்தில் ஏற்பட்ட ஓட்டையால் ஹைட்ரோகுளோரிக் அமிலம் காற்றில் கசிந்தது.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் சிலர் மயங்கி விழுந்ததை பார்த்து சக மாணவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க, மயங்கி விழுந்த மாணவர்கள் அனைவரும் பழயங்காடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமிலம் வெளியேறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி 1 கி.மீ. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், ஆசிட் கசிவை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால், ஆளில்லா பகுதிக்கு லாரி கொண்டு செல்லப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு, கசிவு ஏற்பட்ட லாரியில் இருந்து ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை மற்றொரு டேங்கர் லாரிக்கு நிரப்பும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web