அதிர்ச்சி.. கோவிலில் தனியே இருந்த இளம்பெண்ணிடம் எல்லை மீறிய போலீசார்!

 
கேதார்நாத்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் 8 பேர் கொண்ட குழுவுடன் மே 2023ல் உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் யாத்திரைக்குச் சென்றார். அவரது குழுவில் உள்ள அனைவரும் யாத்திரையை முடித்து விட்டு  ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் அழைத்து வரப்பட்டனர், இடமில்லாததால் ஒரு பெண்ணை மட்டும் விட்டு விட்டு வந்துள்ளனர். அதன் பின்னர் வானிலை மோசமாக மாறியது. இதனால், ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்டு, அன்று இரவு அந்தப் பெண் அங்கேயே தங்க வேண்டியிருந்தது. ஆனால் கோவில் வளாகத்தில் தங்கும் வசதிகள் இல்லாததால், அந்த பெண் போலீஸ் அதிகாரி மஞ்சுல் ராவத்திடம் உதவி கேட்டுள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

அன்றிரவு காவலர் முகாமில் தங்கும்படி சிறுமியை மஞ்சுல் ராவத் கூறினார். அவரது பாதுகாப்புக்கு ஒரு பெண் காவலரும் இருப்பார் என்றார். இதன்படி, கேதார்நாத்தில் உள்ள காவலர்கள் முகாமில் பெண் தங்கியிருந்த போது, ​​மஞ்சுல் ராவத் கூறியது போல் எந்த ஒரு பெண் காவலரும் அங்கு வரவில்லை. அதே நேரத்தில் எஸ்ஐ குல்தீப் நேகி குடிபோதையில் கான்ஸ்டபிள் முகாமுக்கு வந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் இந்தூருக்குச் சென்று ருத்ரபிரயாக் எஸ்பியிடம் வாட்ஸ்அப் மூலம் புகார் அளித்தார்.சஸ்பெண்ட்

புகாரை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் பாதிக்கப்பட்ட பெண் உத்தரகாண்ட் முதல்வரின் சிறப்புப் பிரிவுக்கு தனது புகாரை அனுப்பினார். இதையடுத்து டேராடூன் எஸ்.பி.பிரமோத் குமார் இந்த வழக்கை நேரடியாக விசாரித்தார். அவரது விசாரணை அறிக்கையின் அடிப்படையில், கான்ஸ்டபிள்கள் குல்தீப் நேகி மற்றும் மஞ்சுல் ராவத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web