அதிர்ச்சி... லவ் ஜிகாத்... 17 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! வீடியோ வெளியானதால் விபரீத முடிவு!

 
suicide

நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாய் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், லவ் ஜிகாத் கொடுமைக்கு இளம்பெண் ஒருவர் பலியாகி, தன்னுயிரை விட்டிருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலத்தை லஷ்மிபூர் கேரியைச் சேர்ந்த 17 வயதேயான பெண் ஒருவர், தன்னுடைய அந்தரங்க வீடியோ வெளியாகி, வைரலானதையடுத்து, தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம், லக்ஷ்மிபூர் கேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 3ம் தேதி  அவரது வீட்டில், தனது தாயாரும், சகோதரியும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தையை இழந்து, தாயாரின் அரவணைப்பில் அந்த பெண் வளர்ந்து வருகிறாள் என்பது தெரிந்து திட்டமிட்டே காய் நகர்த்தப்பட்டிருப்பதாக தகவலகள் வெளியாகி மேலும் அதிர செய்துள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக 20 வயதுடைய இஸ்லாமிய இளைஞர் ஒருவரையும், அவரது சகோதரர்கள் இருவர், தந்தை என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், இஸ்லாமிய வாலிபரும் அவரது குடும்பமும், பதின்பருவ பெண்ணைத் திருமணம் செய்து வைக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகத் தெரிவிக்கிறார்கள்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு இளம்பெண்ணின் உடல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது பெண்ணின் குடும்பத்தினரும் ஊராரும் குற்றம் சாட்டப்பட்ட வாலிபரின் வீட்டைத் தாக்கத் தொடங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதனைத் தடுத்து நிறுத்தினர். மாவட்ட நீதிபதி மற்றும் காவல் கண்காணிப்பாளர் கிராமத்தினரிடம் கலவரத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார்கள். 

suicide

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் கடை, பொது நிலத்தில் இருந்ததால் அது இடிக்கப்பட்டது. பெண்ணின் சகோதரி, குற்றம் சாட்டப்பட்டவர் நீண்ட நாள் மிரட்டி வந்ததாகவும் அதனாலேயே பயந்து அவர் அந்த முடிவுக்கு சென்றிருப்பார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web