அதிர்ச்சி.. தீயில் கருகி நாசமான கார்.. டிரைவர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

 
கோழிக்கோடு பீச் விபத்து

கேரளா கோழிக்கோடு   கொன்னாடு கடற்கரை அருகே  ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று நண்பகல் 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கார் தீப்பிடித்து எரிவதை கவனித்த போக்குவரத்து போலீசார் வாகனத்தை துரத்தி சென்று நிறுத்துமாறு கூறினர். ஆனால் அவர் சாலையோரம் நிறுத்த முயன்றபோது கார் தீப்பிடித்து எரிந்தது.

தீப்பிடித்த காரை நிறுத்தி அருகில் இருந்த மீனவர்கள் காரில் இருந்தவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் சீட் பெல்ட் சிக்கியதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. தீ விபத்து காரணமாக மீட்புப் பணிகள் கைவிடப்பட்டன. தீயணைப்பு துறையினர் வருவதற்குள், கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.   தீப்பிடித்ததும் யாரும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது.

அவ்வழியாக சென்றவர்கள் டிரைவரை காப்பாற்ற முயன்றும், சரியான நேரத்தில் சீட் பெல்ட்டை கழற்ற முடியவில்லை. இதில் டிரைவர் வண்டிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இறந்தவர்களை அடையாளம் காணவும், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியவும் நடவடிக்கை எடுத்து வருவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web