அதிர்ச்சி... டெல்லியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்! பீதியில் மக்கள்

டெல்லியில் மீண்டும் அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில், டெல்லியில் அடுத்தடுத்து இரண்டாவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒரு பக்கம் வீட்டை விட்டு வெளியே வர இயலாத அளவுக்கு காற்று மாசு என்று திணறும் டெல்லி மக்களுக்கு இந்த நிலநடுக்கம் அடுத்த அதிர்ச்சியாக அமைந்துள்ளது. நேபாளத்தையடுத்து டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.
நேபாளத்தில் அண்மையில் 6.4 ரிக்டரில் பதிவாகி இருந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். நேபாளத்தில் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நேபாள நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் பகுதி. இதனால் ஜாஜர்கோட், ருக்கும் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் பெரும் சேதமும் உயிரிழப்பும் அதிகமாக இருந்தது.
ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஏற்படுகிற கடும் நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வடபகுதிகளிலும் உணரப்படுவது வழக்கம். நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கமும், அதன் பிந்தைய அதிர்வுகளும் டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நேபாளம் நாட்டில் இன்று பிற்பகல் 4.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் எதிரொலியாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.6 அளவுகோலாக பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களில் இது 2-வது முறையாகும். டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வீதிகளில் குவிந்தனர். அடுத்தடுத்து நிலநடுக்க அதிர்வுகள் உணரப்படுவதால் வட இந்திய மாநில மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!