அதிர்ச்சி வீடியோ... திருமண வீட்டில் நுழைந்து இளம்பெண்ணைக் கடத்த முயற்சி!

 
சலீம்

இளம்பெண் ஒருவரை, திருமணம் நிச்சயமானது தெரிந்து, திருமண வீட்டிற்குள் நுழைந்து கடத்திச் செல்ல முயன்ற இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில்  22 வயதான இளம்பெண் ஒருவருக்கு கல்யாணம். திருமண வீட்டிற்கு சென்ற இளைஞர் பட்டாளம்  மணப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான தகவலில்  சலீம் கான் என்ற இளைஞர் ஷாருக், சமீர், ஜோதா ஆகிய தன்னுடைய கூட்டாளிகளுடன் கத்தி மற்றும் அரிவாளுடன் சென்றார்.

  


இளம் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை கடத்த முயற்சித்தார். தடுக்க வந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரனை தாக்கியதோடு இளம்பெண்ணை தரதரவென வெளியே இழுத்து சென்றனர். அப்போது அங்கிருந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தினரை உடனடியாக கலைந்து செல்லுங்கள் என இளைஞர் சலீம் மிரட்டியுள்ளார். இருப்பினும் கூட்டம் அதிகமானதால் சலீம் பயந்து இளம் பெண்ணை அங்கேயே விட்டு விட்டு  சென்று விட்டார்.

இது குறித்து நடத்திய விசாரணையில் சலீம் அந்த இளம்பெண்ணை ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு இளம் பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டலும் விடுத்துள்ளார். நீ வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என கூறியுள்ளார்.

பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்

இந்நிலையில் இளம்பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற இருந்ததால் சலீம் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கடத்த முயற்சி செய்ததாக தெரிகிறது. இது குறித்து  பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவருடைய தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சலீம் உட்பட இருவரை கைது செய்தனர்.  இது குறித்த  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web