அதிர்ச்சி வீடியோ.. மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரை விட்ட நடன கலைஞர்!
புனே கர்பா கிங் என்று அழைக்கப்படும் அசோக் மாலி, சகனில் நடந்த நவராத்திரி விழா நிகழ்வின் போது கர்பா விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் இறந்தார். மாலி லேகா என்பவருடன் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென நிலைகுலைந்து தரையில் சரிந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தனர்.
7 Oct 24 : Actor Ashok Mali, affectionately known as the Garba King of Pune, tragically passed away during a Garba event in Chakan. While dancing to his beloved Garba, Ashok Mali suddenly collapsed due to a severe #heartattack2024 💉#LuciferShotWorking pic.twitter.com/llZ6ho3dJd
— Anand Panna (@AnandPanna1) October 8, 2024
இந்த கொடூர சம்பவம் மொபைல் கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு வைரல் வீடியோவில், பிரபல பாலிவுட் பாடலான "குங்கட் மே சந்த் ஹோகா அகோ மே சஜ்னி"யில் அசோக் மாலி மகிழ்ச்சியுடன் கர்பா ஆடுவதைக் காணலாம். கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென தரையில் சரிந்து விழுந்தார்.

துலே மாவட்டம் ஷிந்த்கேடா தாலுகாவில் உள்ள ஹோல் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் மாலி. அசோக் மாலியின் கர்பாவை காண பெரும் கூட்டம் கூடியிருந்தது. இவர் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக கர்பா பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். சாக்கனில் நவராத்திரி நிகழ்வின் போது ஏற்பாட்டாளர்களால் அவர் அழைக்கப்பட்டுள்ளார். அசோக் மாலியுடன் அவரது மகன் பவேஷ் வந்திருந்தார். இருவரும் கர்பா ஆடிக் கொண்டிருந்த போது தான் உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் சூழ்ந்தது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
