அதிர்ச்சி வீடியோ... பாம்புகடி விஷம் இறங்கி, கங்கை நீரில் மகனை மிதக்க விட்ட பெற்றோர்!

 
மோஹித் மோஹித்

கடவுள் நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் ஒரு இழை தான் வித்தியாசம். ஆனால், அந்த மூட நம்பிக்கை வாழ்க்கையையே காலி செய்து விடுகிறது. ஜோதிடத்தை நம்புபவர்கள், எதிர்காலத்தை தங்கள் வசப்படுத்துகிற ஒரு எச்சரிக்கையாக பார்க்கும் வரையில் பிரச்சினையில்லை. ஆனால், இப்போது நேரம் சரியில்லை என்று வீட்டில் உட்கார்ந்திருக்கிற மாதிரி மூட நம்பிக்கையால் மகனைப் பறிகொடுத்திருக்கிறார்கள் பெற்றோர்கள்.

சமீபத்தில், புற்று நோய் குணமாக 5 வயது குழந்தையை கங்கை நீரில் மூழ்கடித்து சாகடித்த சம்பவம் நம்மை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  உத்தரபிரதேச மாநிலம் புலன்சாகர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் மோஹித் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்க கடந்த 26ம் தேதி சொந்த கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வந்திருந்தார்.

 



தேர்தல் நாளில் வாக்களித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். இதையடுத்து நண்பர்களுடன் வயலுக்குச் சென்ற அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இளைஞரை குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.  இளைஞர் மோஹித்தின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், மருந்தினால் குணமாகாது என கைகளை விரித்துள்ளனர். இதையடுத்து கங்கை நதியில் உடலை வைத்தால் பாம்பு கடித்த விஷம் தானாக இறங்கும் என சிலர் கூறியுள்ளனர்.

இதை நம்பிய மோஹித்தின் குடும்பத்தினர், கடந்த 2 நாட்களாக கங்கை நதியில் மோஹித்தின் உடலை கயிறு கட்டி வைத்திருந்தனர். மோஹித்தின் மயக்கமான உடல் விஷத்தில் இருந்து மீள்வதற்கு அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். ஆனால் மூடநம்பிக்கைகள் எதுவும் அந்த இளைஞனைக் காப்பாற்றவில்லை, மாறாக அந்த இளைஞன் பாம்பு விஷத்தால் இறந்தார். இருந்த போதிலும், இளம் மோஹித்தின் உடல் கங்கை நதியில் மிதந்து கொண்டே இருந்தது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!