அண்ணியை மறுமணம் செய்த கொழுந்தன்.. ஆத்திரத்தில் தம்பியை தீர்த்து கட்டிய சகோதரர்கள்!

 
யஷ்வீர்

சுக்வீர் உத்தரபிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் உள்ள குரானா கிராமத்தில் வசிப்பவர்.இவரது மனைவி ரிது. திருமணம் ஆனதில் இருந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில், சுக்வீர் திடீரென இறந்துள்ளார். இதனால் அவரது மனைவி விதவையாக அவதிப்பட்டு வரவே, சுக்வீரின் மனைவி தனது கணவரின் தம்பி யஷ்வீரை மணந்தார். இருவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்க யஷ்வீர் டெல்லியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

கொலை

 இதற்கிடையில், யஷ்வீரின் மற்ற 2 சகோதரர்களான உதய்வீர் மற்றும் ஓம்வீர் ஆகியோர் யஷ்வீரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வீட்டில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. யஷ்வீர் தனது அண்ணியை எப்படி திருமணம் செய்ய முடியும்? என வாக்குவாதம் தொடர்ந்துள்ளது.சம்பவத்தன்று டெல்லியில் இருந்து வீட்டுக்கு வந்த யஷ்வீருக்கும், அவரது சகோதரர்கள் உதய்வீருக்கும், ஓம்வீருக்கும் தகராறு ஏற்பட்டு யஷ்வீரை அடித்துக் கொன்றனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் யாஷ்வீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து சகோதரனை கொன்ற உதய்வீர் , ஓம்வீரை கைது செய்து சிறையில் அடைத்தார். மூத்த மகன் இறந்துவிட்டதாகவும், மற்ற 2 மகன்களும் கொலைகாரர்களாக கைது செய்யப்பட்டதாகவும், மற்றொரு மகனை இழந்ததாகவும் அவர்களது தாய் கதறி அழுதார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!