பெற்ற தாயை கொன்று உடல் உறுப்புகளை சமைத்து தின்ற கொடூர மகன்.. மரண தண்டனை உறுதி செய்தது நீதிமன்றம்!

 
‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!! ‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மகட்வாலா வாசக் பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மாம் (63). இவரது மகன் சுனில் ராமா (38). சம்பவத்தன்று மது குடிக்க தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் எல்லம்மாம் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகன் தாயை கொடூரமாக கொன்றான்.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

பின்னர், தாயின் உடலை வெட்டி, சில பாகங்களை சமைத்து சாப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் 28 ஆகஸ்ட் 2017 அன்று நடந்தது. இந்த வழக்கில் சுனில் ராமாவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோலாப்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சுனில் ராமாவுக்கு 2021ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சுனில் ராமா மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேபோல், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யக்கோரி, மாநில அரசும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சுனில் ராமாவுக்கு கோலாப்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இதுகுறித்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “சுனில் ராமாவின் தூக்கு தண்டனையை உறுதி செய்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் தாயை மட்டும் கொல்லவில்லை. அவரது மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் அகற்றப்பட்டு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டுள்ளார்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

மேலும், அவரது இதயமும் சமைத்து சாப்பிட்டுள்ளார். எனவே, இது நரமாமிசத்தின் வழக்கு. எனவே இது மிகவும் அரிதான வழக்கு என்று கூறலாம். இந்த கொடூர கொலை சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. நரமாமிசத்தை உண்ட ஒருவர் மனந்திரும்ப வாய்ப்பில்லை. இது ஒரு தாயின் மிகக் கொடூரமான கொலை.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!