அதிர்ச்சி வீடியோ... பெண்மணியைக் கடித்து குதறிய தெருநாய்கள்!
நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தெரு நாய்களின் தொந்தரவுகள் சமீப காலங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலையில் தனியாக நடந்து செல்லும் குழந்தைகள் வயதானவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stray Dogs Menace: A tragic incident occurred near Wadala Chowk in Jalandhar, where an elderly woman was attacked by 7-8 stray dogs while on her way to a Gurdwara early in the morning. The entire incident was recorded on CCTV footage. The woman was severely injured, hospitalized,… pic.twitter.com/Hl7i098NQ8
— Gagandeep Singh (@Gagan4344) December 15, 2024
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மூதாட்டி தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது தெருநாய்கள் விரட்டி விரட்டி மூதாட்டியை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக முயற்சி செய்கிறார். ஆனாலும் நாய்கள் அவரை கடித்து குதறுவதை காணமுடிகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சமயத்தில் அந்த பக்கமாக வந்த ஒருவர் தெரு நாய்களை விரட்டி மூதாட்டியை காப்பாற்றுகிறார்.

மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்ததில் தெரு நாய்கள் கடித்ததால் மூதாட்டியின் உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் தெரு நாய்கள் மூதாட்டியை விரட்டி கடித்த சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
