கொடூரம்... பெற்ற மகளை இரும்பு ராடால் தாக்கி விஷம் கொடுத்து கொன்ற தந்தை!

 
பாத்திமா

கேரளத்தில், தான் பெற்ற மகளை இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி, பூச்சி மருந்தை வலுக்கட்டாயமாக மகளின்வாயில் ஊற்றி கொலைச் செய்து அதிர வைத்திருக்கிற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்தவர் அபீஸ் முகமது (43). இவர் கொச்சி துறைமுகத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் ஃபாத்திமா (14), ஆலுவா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில், அதே பள்ளியில் பயிலும் 16 வயதான வேற்று மதத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருடன், ஃபாத்திமாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி, தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

Murder

மகளின் காதல் குறித்து, அறிந்த அபீஸ், தனது மகளை கண்டித்ததாக தெரிகிறது. ஆனாலும், ஃபாத்திமா ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார். இதையடுத்து, மகளின் செல்போனை அபீஸ் உடைத்துள்ளார். ஆனாலும், மகள் வேறு ஒரு போனில் காதலனுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இதனைக் கண்டுபிடித்த அபீஸ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். 

இது தொடர்பாக, கடந்த மாதம் (அக்டோபர்) 29ம் தேதி மகளுக்கும், அவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அபீஸ் வீட்டில் இருந்த இரும்பு ராடால் மகள் ஃபாத்திமாவை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், வாயில் பூச்சி மருந்தையும் ஊற்றியுள்ளார். 

Police

இந்த சம்பவங்கள் அனைத்தையும் சிறுமியின் அருகில் இருந்து பார்த்த தாய், கணவரை தடுத்து மகளை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஒரு வாரமாக உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஃபாத்திமா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தந்தை அபீஸ் முகமதுவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web