இமயமலையில் விமான விபத்து... 56 வருடங்களுக்குப் பின் ராணுவ வீரர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு!

 
1968 இமயமலை விபத்து 1968 இமயமலை விபத்து

இப்போதும் அந்த விபத்து பற்றி கூறுபவர்கள் பதைபதைத்து பேசுகிறார்கள். மொத்தம் 102 ராணுவ வீரர்கள். மோசமான விமான விபத்தில் 102 வீரர்களுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகள் வரை அவர்களின் மரணத்தைப் பற்றிய பேச்சு இருந்தது. ஒருத்தரின் சடலம் கூடவா கிடைக்கவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உறவினர்களும் கூட தங்களது மகன் சடலமாவது கிடைக்காதா என்று பரிதவித்தார்கள்.

ஆம்.. அது 1968ம் வருஷம். பிப்ரவரி 7ம் தேதி. காஷ்மீரில் இருந்து 102 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு சென்ற நிலையில், திடீரென இமயமலையில் கோர விபத்துக்குள்ளானது. அதில் 102 பயணிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இமயமலையில் நடைப்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் 56 வருடங்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணிகள் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. 2003ம் ஆண்டு மலையேறுபவர்கள் விமானத்தின் சில சிதறிய பகுதிகளைக் கண்டறிந்தனர். அதன் பின்னர் 2019ல், ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தற்போது இந்திய ராணுவத்தின் மலையேறும் வீரர்கள் 4 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டதில் மூன்று பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள் மல்கான் சிங், நாராயண் சிங் மற்றும் தாமஸ் செரியன் ஆவார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள எலந்தூரைச் சேர்ந்தவர் தாமஸ் செரியன். தாமஸ் செரியன் சடலமாக மீட்கப்பட்டதாக அவரது தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ராணுவ ஆவணங்களின் உதவியுடன், மல்கான் சிங்கின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவப் படையில் பணியாற்றிய ராணுவ வீரர் நாராயண் சிங் சடலமும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் கர்வால் சாமோலி தாலுகா கோல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொரு உடல் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!