கொடூரத்தின் உச்சம்.. கன்றுக்குட்டியை காரால் ஏற்றி நசுக்கி கொலை.. பகீர் வீடியோ வைரல்!

 
கன்றுகுட்டி கன்றுகுட்டி

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில்  கன்றுக்குட்டியை வேண்டுமென்றே காரில் ஏற்றி நசுக்கி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஷேக் ஷாகித் என்பவர் தனது காரால் கன்றுக்குட்டியை கொன்றது தெரியவந்தது. அவர் வேண்டுமென்றே காரை எற்றி கன்றுக்குட்டியைக் கொன்றுள்ளார். கார் பின்னோக்கி நகர்ந்தபோது, ​​கன்றுக்குட்டி வேதனையில் அலறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

 


அருகில் இருந்த பசுக்கள், கன்றின் தாய் மற்றும் பிற பசுக்கள், கதறல் சத்தம் கேட்டு பின்தொடர்ந்தன. ஆனால், அந்த கொடூரமான நபர் அந்த கன்றுக்குட்டியை  நசுக்கி கொன்றுள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் குற்றவாளியை கைது செய்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் வேறு ஒருவரின் உயிரை பறிக்க நேரிடும் என கூறி வருகின்றனர்.

மேலும் சிலர், ஐயோ, இதைப் பார்த்து தாய் பசு எப்படி வருத்தப்பட்டது. ஏன் இவ்வளவு வெறுப்பு? இந்த நாயை உடனடியாக கைது செய்யுமாறு சத்தீஸ்கர் காவல்துறையினரை கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!