ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோன்... ஆன்லைனில் ஆர்டர் செய்து டெலிவரி பையனைக் கொலை செய்த கொடூரம்!

 
 அப்பராசித் குப்தா

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐ போனை ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு, செல்போனை தனது வீட்டிற்கு டெலிவரி செய்ய வந்த பையனைக் கொலைச் செய்து விட்டு போனை எடுத்துக் கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் ஐபோனுக்காக ஆசைப்பட்ட ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு டெலிவரி செய்யும் தொழிலாளியை செல்போனுக்காக கொலை செய்துள்ளார்.

சாஹு என்ற நபர் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோனை கேஷ் ஆன் டெலிவரி மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். செல்போனை சாஹூ வீட்டிற்கு டெலிவரி செய்வதற்காக சென்ற அப்பராசித் குப்தா என்பவரை, தன்னிடம் ஐபோன் வாங்குவதற்கு அவ்வளவு பணம் இல்லாததால் தனது நண்பருடன் சேர்ந்து சாஹூ கொலை செய்துள்ளார்.

டெலிவரி  செய்ய சென்ற மகன் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் மகனைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, அதிரடி வேட்டை நடத்திய போலீசார், சாஹுவை கைது செய்தனர்.

விசாரணையில், ஐபோனுக்காக கொலை செய்யப்பட்டதாக சாஹு ஒப்புக்கொண்டார். பின்னர் வீட்டின் அருகே கால்வாயில் கிடந்த அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மொபைல் போனுக்காக நடத்தப்பட்ட இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web