அடுத்தடுத்து அதிர்ச்சி... அதே ஜூன் 2ம் தேதி மீண்டும் ரயில் விபத்து... தொடரும் சோகம்!

 
ரயில் விபத்து
2023 ஜூன் மாதம் 2ம் தேதி ஒடிசாவின்  பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மீதுஷாலிமர் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அதே சமயத்தில் எதிர்த்திசையில் பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டி விபத்தில் சிக்கி தடம் புரண்டு வரலாறு காணாத விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  ரயில்வே பாதுகாப்பு ஆணையம் இந்த விபத்து குறித்த விசாரணையில்   40 பக்க அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  

ஒடிசா

அந்த அறிக்கையில் தவறான வயரிங், கேபிள் இணைப்பால் தவறான சிக்னல் கிடைத்தது. இதுவே ரயில் விபத்து ஏற்பட காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ரயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுதான் விபத்துக்கு பொறுப்பு எனக் கூறப்பட்டிருந்தது.  இந்த விபத்து குறித்த விசாரணையை சிபிஐ தனியாக மேற்கொண்டது. அதன்படி  ரயில்வே மூத்த பொறியாளர் அருண் குமார்மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய 3  பேரின் மீது  வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

ஒடிசா விபத்து

அதே போல் இந்த வருடமும் ஜூன் 2ம் தேதி  மற்றுமொரு விபத்து நடந்துள்ளது.  பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மற்றொரு ரயில் பின்னால் நிறுத்தியதில் 2  லோகோ பைலட்டுகள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த 2 லோகோ பைலட்டுகள் ஸ்ரீ ஃபதேகர் சாஹிப் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இருவரும் உத்திரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் வசிப்பவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த ஆண்டு விபத்தை நினைத்தாலும் இன்றும் மனதில் எழும் அச்சம் எழும். இந்நிலையில் அதே நாளில் நடந்த இந்த விபத்து   நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் பின்னால் இருந்து மோதியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web