ஜிம்மில் திருட வந்த இளைஞன்.. நூதன தண்டனை கொடுத்த உரிமையாளர்.. வீடியோ வைரல்!

 
ஜிம் திருடன்

திருடச் சென்ற இடத்தில் சாமானியர்களிடம் திருடர்கள் பிடிபட்டால் அவர்களை அடித்து ஒப்படைப்பது வழக்கம். ஆனால் மத்திய பிரதேசத்தில் ஜிம்மில் திருட முயன்ற இளைஞர் ஒருவர் ஜிம் உரிமையாளரிடம் சிக்கி  தண்டிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் நவீன உடற்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஜிம் முழுவதும் சிசிடிவி உள்ளது.

கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால், உரிமையாளர் தனது செல்போனில் வீட்டிலிருந்து ஜிம்மிற்குள் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்க முடியும். சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவர் திருடுவதற்காக உடற்பயிற்சி கூடத்திற்குள் நுழைந்தார். அப்போது ஜிம் உரிமையாளர் தனது செல்போனில் ஜன்னல் வழியாக ஷட்டர் அருகே திருடன் சுற்றித்திரிவதை பார்த்துள்ளார்.

உடனே ஜிம்மிற்கு சென்று திருடனை கையும் களவுமாக பிடித்தார். பின்னர் அவரை போலீசிடம் ஒப்படைத்தார். முன்னதாக ஜிம் உரிமையாளர் திருடனை நூதனமாக தண்டிக்க முடிவு செய்தார். அதன்படி, திருடனை ஜிம்மில் உள்ள டிரெட்மில்லில் ஓட வைத்தார். இது தொடர்பான  அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web