குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!

 
திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்த சோகம். திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்த சோகம்.

அரியான மாநிலத்தில் குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள், நீச்சல் தெரியாத நிலையில் குளத்தில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் ஹம்ரோக் அலிபூர் என்ற கிராமத்தின் அருகே குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் குளிக்க அந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் சென்றுள்ளனர். சிறுவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

சிறுவர்கள் தண்ணீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக சிறுவர்கள் கூச்சலிட்டுள்ளனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு கிராமத்தினர் விரைந்து சென்று குளத்தில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் ஆஷிஷ், தேவேந்திரா, சுராஜ் ஆகிய 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி

இது குறித்த தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 3 சிறுவர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?